இலங்கையின் உள்நாட்டு போரில் கணவனை பறிகொடுத்த பெண்கள் வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டி உள்ளன என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Fisherfolk Solidarity Movement என்கிற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த கீதா லக்மினி என்பவர் தெரிவிக்கையில்.
'போரில் வடக்கு. கிழக்கு மாகாணங்களில் 85,000 பெண்கள் விதவைகளாகி உள்ளார்கள். மன்னாரில் மடு பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்று பாலியல் தொழிலுக்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றது.
இதன் காரணம் இக்கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஆண்கள் யாரும் இல்லை, வேலை இல்லை, பிழைக்கின்றமைக்கு வேறு மார்க்கம் இல்லை. குழந்தைகளை வளர்க்கின்றமைக்காக பெண்கள் உடலை விற்று பாலியல் தொழில் செய்கின்றார்கள். இது மாத்திரமே அவர்களின் பிழைப்புக்கான ஒரு வழியாக இருந்து வருகின்றது.
மேலும் அரசால் அறிவிக்கப்பட்ட போர் நஷ்டஈடு அநேக பெண்களுக்கு கிடைக்கவில்லை' எனவும் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment