சிரியா தொடர்பான தீர்மானமொன்றை எட்டுவதற்கான காலம் எழுந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் விசேட கூட்டத்தில் உரையாற்றும்போதே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பேங்கிமூன் இவ்வாறு தெரிவித்தார்.
நியூயோர்க் நகரில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர், தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்
சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்கள், ஏனைய நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளன. சிரியாவில் மோதல் காரணமாக, நாளொன்றுக்கு நூற்றுக்கும் கூடுதலானோர், உயிரிழக்கின்றனர்.
இதுவொரு பாரிய அனர்த்தமாகும். சிரியா தொடர்பாக அரபுலீக் பிரேரித்துள்ள மனிதாபிமான மற்றும் அரசியல் தீர்வுக்கு, சர்வதேச சமூகம் ஆதரவு வழங்குவதற்கான காலம் எழுந்துள்ளதாகவும்,அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment