மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பிரதேச செயலக பிரிவின் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் , பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் வழிகாட்டலில், பிரதேச அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் அங்கீகாரத்தில் , ஆறரை கோடி ரூபா அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், இவ்வாண்டு ஒரு கிராமத்திற்கு ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் , பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 2 கோடியே 40 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இப்பிரதேச செயலக பிரிவில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி , மீன்பிடி, உள்ளக வீதி அபிவிருத்தி, விளையாட்டு அபிவிருத்தி, குடிநீர் விநியோகம் மற்றும் உட்கட்டமைப்பு வாழ்வாதார உதவி அபிவிருத்தி திட்டங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அமுல்ப்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக ஆராயும் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில், வவுனதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளர் திருமதி. உருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment