சுவிற்சலாந்தில் பெண்புலி – அம்பலப்படுத்துகிறது அரசாங்கம்
தழிழீழ நாடு கடந்த அரசின் பிரதிப் பேச்சாளர் சுகன்யா பயங்கார அமைப்பின் உறுப்பினர்.-மீட்கப்பட்ட ஆவணங்கள்
புத்திரசிகாமணி சுகன்யா தொடர்பான தகவல்கள் அம்பலம்
இலங்கையில் நிலவிய, பல உயிர்களை காவுகொள்ள காரணமாக இருந்த மிகக் கொடூர பயங்கரவாதம் இராணுவத்தினரின் முயற்சியால் கடந்த 2009 மே இல் முற்றாக அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து. தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இப்பயங்கரவாத அமைப்பிற்கு பல வழிகளில் உதவிவந்த புலம்பெயர் நாடுகளில் உள்ள பயங்கரவாத ஆதரவு அமைப்புகள், இப் பயங்கரவாதத்தை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்அந்தவகையில் தமிழீழ நாடுகடந்த அரசு என்ற அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை மறைப்பதற்தாக ஜனநாயகம் மற்றும் அரசியல் போன்ற அணுகுமுறைகளை கையாள முற்பட்டுவருகின்றனர். இவர்கள் எவ் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு செயற்பட்டாளும் இவர்களும் ஒரு பயங்கரவாத அமைப்பினரே ஆவார்கள்.
வெளிநாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை வேறுபடுத்தி மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை அப்பாவி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவதே இத் தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். புலம்பெயர்மக்கள் அதிகமாக வாழும் மேற்கத்தய நாடுகளில் இவர்கள் தமது அலுவலகங்களை நிறுவியுள்ளனர். இதில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் முன்னய சர்வதேச நடவடிக்கைளில் முழுமையாக ஈடுபட்டவர்கள் ஆவார்கள்.
ஜக்கிய அமெரிக்க பிரஜா உரிமையுள்ள விடுதலைப்புலி உறுப்பினரான வீ.ருந்திரகுமார், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சட்ட ஆலோசகராவார். இவரால் 14 உறுப்பிப்பினர்களை கொண்ட ஒரு குழுவொன்று தன்னிச்சையாக நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் விடுதலைப்புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். இவர்கள் தமிழீழ நாடு கடந்த அரசின் முக்கிய செயற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர். 2010 மேயில் தமிழீழ நாடு கடந்த அரசின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இணைத்தளமூடாக வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதில் 85%க்கு மேற்பட்ட புலம்பெயர்மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை, இது இவர்களுக்கு பாதகமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து ஜக்கிய அமெரிக்காவில் 2010 மே, 2010 செப்டம்பர் மற்றும் 2011 பெப்ரவரி ஆகிய மூன்று தடவைகள் இடம்பெற்ற அமர்களின் மூலம் தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமராக ரூந்திரகுமாரும், ஏனைய 22 பேர் அமைச்சர்களாகவும் தெரிவுசெய்யப்பட்னர்.
எவ்வாறு இருப்பினும் தமிழீழ நாடு கடந்த அரசானது, விடுதலைப்புலிகளின் அதே தமிழீழ கொள்கையை கொண்டிருப்பதனால் இவர்களும் விடுதலைப்புலிகளின் வழிமுறையினரே! இதைத்தவிர இவ் நாடு கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தம்மை மனித உரிமை ஆவளர்களாக வெளிப்படுத்தினாலும் இவர்களும் பயங்கரவாத உறுப்பினர்களே!. இதை மனிதாபிமான நவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட ஆவணங்கள். டிஜிட்டல் தரவுகள், புகைப்படங்கள் மற்றும் பல ஆதாரங்கள் மூலம் தெளிவாக உறுதிப்படுத்த முடியும்.
புத்திரசிகாமணி சுகன்யா என்பவர் சுவிஸ்லாந்தில் வாழும் ஒரு முக்கிய விடுதலைப்புலி உறுப்பினராவார். இவர் 2010 மேயில் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். பின்னர் தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிப் பேச்சாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் மனித உரிமைகளுக்குகெதிராக செயற்பட்டு பல கொடூர செய்பாடுகளைப்புரிந்த தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் ஒரு உறுப்பினர் என்பது கிடைப்பெற்றுள்ள ஆதாராங்கள் மூலம் தெளிவாக உறுதிப்படுத்தக்கூடியதாகவுள்ளது.
இவர் 2004 இல் வன்னிக்கு சென்றுசெய்து விடுதலைப்புலி அமைப்பில் இணைந்துள்ளதுடன், விடுதலைப்புலிகளின் பயங்கரவாத சர்வதேச இணைப்புப் பிரிவின் கீழ் நடாத்தப்பட்ட பயிற்சியிலும் கலந்துக்கொண்டுள்ளார். இதைத்தவிர இவரது பெற்றோர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி அளித்திவருதாகவும் தெரிவித்துள்ளார். இத் தகவல்களை சுகன்யாவால் அவரது கையெடுத்தால் பூரணப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆர்ச்சேர்ப்பு விண்ணப்பப் படிவத்தில் காணக்கூடியதாகவுள்ளது.
தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் தற்போது மனித உரிமை ஆவளர்களாக வீரு நடைப்போட்டு, மனித உரிமைகளுக்காக குரல்லெழுப்புவது போல் நடித்தாலும், இவர்கள் மிகக் கொடூர மனித உரிமை மீறல்களை புரிந்த பயங்கரவாத அமைப்பின் ஒரு முக்கிய கிளையினரே என்பது இவ்வுலகத்தார் அறிந்த உண்மையாகும்.
இவர்கள் பயங்கரவாதிகளின் ஒருப் பிரிவினர் என்பது ஒரு புறம் இருக்க இன்னொரு வேடிக்கையான விடயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது கனடிய தமிழ் காங்கரிஸினால்(விடுதலைப்புலி ஆதரவு அமைப்பு) பொது மன்னிப்புச் சபைக்கு நிதி திரட்டுவதற்காக இடம்பெற்ற பிரச்சாரத்தில் இவ் நாடு கடந்த அரசாங்கமும் பங்கு பற்றியமையாகும்.
இத் தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் போது எமக்கு தெளிவாகும் விடயம் யாதெனில், ஒரு காலத்தில் மிகக் கொடூர பயங்கரவாத அமைப்பாக செயற்பட்ட குழுவினர் தற்போது அதே பயங்கரவாத இலக்குடன் வேறு ஒரு வழியில் செயற்பட முற்பட்டுள்ளமையாகும்.
எல்வாவற்றையும் விடமேலாக இங்கு கவனிக்கப்படவேண்டி, கவலைக்குரிய விடயம் நிகழ்ந்துள்ளது. அதுதான் சர்வதேச ரிதியில் மனித உரிமைகளுக்காக இயங்கும் பொது மன்னிப்புச் சபை உட்பட ஏனைய அமைப்புக்கள், உலக நிறுவனங்கள் மற்றும் சில அரச அமைப்புக்கள் இப் பயங்கரவாத செயற்பாட்டிற்கு துணைபோய்யுள்ளமையாகும்.
இவ் அமைப்புகள் தம்மை அறியாமல் பயங்கரவாதிகளின் தந்திரமான பொறியில் மாட்டிக்கொண்டார்களா? அல்லது உண்மை எது என்று அறிவதில் பாரா முகமாக இருக்கின்றார்களா? என்பது புரியாத புதிராகவுள்ளது.
நன்றி விடிவு
2 comments :
ஒரு காலத்தில் மிகக் கொடூர பயங்கரவாத அமைப்பாக செயற்பட்ட குழுவினர், தற்போது மனித உரிமைகளுக்காக குரல்லெழுப்புவது போல் நடித்தாலும், இவர்கள் மிகக் கொடூர மனித உரிமை மீறல்களை புரிந்த பயங்கரவாத அமைப்பினரே என்பது இவ்வுலகத்தார் அறிந்த உண்மையாகும்.
Why Sri Lankan Goverment still didnt inform about her to swiss Goverment? they need to inform about this terrorist to swiss Goverment, interpol and her employers.
Post a Comment