Wednesday, March 14, 2012

கலைப்பீடத்தில் புதிய விதிமுறைகள் யாழ்.பல்கலை மாணவர்கள் இன்று பகீஸ்கரிப்பு

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் மாணவர்கள் மீது புதிதாக திணிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் பகீஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை நாடாத்தியுள்ளனர்.

இன்று காலை முதல் தமது விரிவுரைகளுக்கு செல்லாமல் இவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டதோடு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர் .
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன.


கலைப்பீடத்தில் இரண்டாம் வருட மாணவர்கள் தமது சிறப்புக்கலை பாடத்தெரிவை மேற்கொள்ளும் விடயத்தில் புதிதாக சில கட்டுப்பாடுகள் புகுத்தப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் ஒவ்வொரு துறைகளிலும் மட்டுப்பாடுகள் எதுவுமின்றி தகுதி படைத்த மாணவர்கள் சிறப்புக்கலையை பயில்வதற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.

ஆனால் இம்முறை மாணவர்கள் அடைந்திருக்க வேண்டிய G P A அளவு அதிகரிக்கப்பட்டமையும் எவ்வளவு மாணவர்கள் தகுதி படைத்திருந்தாலும் 40 மாணவர்களே குறித்த பாடத்தை சிறப்புக்கலையாக பயில தெரிவு செய்யபப்டுவார்கள் எனும் புதிய விதியானது புகுத்தப்பட்டுள்ளது.

ஒருபாடத்தை முதல்வருடத்தில் கற்று அப்பாடத்தை சிறப்புக்கலையாக தொடர்ந்து கற்கவிரும்பும் பு P யு அடைவை அடைந்த மாணவர்கள் பலரும் இவ்விதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில விசேட பாட அனுமதியின் கீழ் பல்கலைக்கழக அனுமதிபெற்ற மாணவர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேவையான அளவு G P A அளவைப் பெற்ற மாணவர்கள் சிறப்புக்கலைப்பாடத்தை கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் சம்மந்தமாக கடந்த 08ஃ03ஃ2012 அன்று மாணவப்பொதுப் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு கலைப்பீடாதிபதி ஊடாக துணைவேந்தரிடம் ஓர் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் சிறப்புப் பாட தெரிவு சம்மந்தமாக சிறந்ததொரு முடிவைத்தருமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆயினும் அக்கடிதத்துக்கு இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.


அரசாங்கம் வருடாவருடம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் தொகையை அதிகரித்துச் செல்லும் அதேவேளை மாணவர்களது சிறப்புப்பாடத்தெரிவினை மட்டுப்படுத்தும் இச் செயல் ஒரு அநீதியானதாகும். மேலும் மாணவர்களது எதிர்கால நலனைக்கருத்திற் கொண்டு தொழிற்துறை சார்ந்த பாடங்களையே பெரிதும் கற்கவிரும்புகினறனர்.

இதனால் அதிகளவு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சினை காரணமாக இவ்வருடக் கல்வியாண்டு தொடங்கியும் மாணவர்கள் எப்பாடத்தில் சிறப்புபாட அனுமதிகிடைக்கும் என தெளிவில்லாத காரணத்தால் விரிவுரைகளுக்கு சமூகமளிக்க முடியாமல் தடுமாறி வருவதுடன் மாணவர்களது வருகைப்பதிவேட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்பீடத்தில் நிலவும் இப்பிரச்சினையில் தலையிட்டு சிறந்ததொரு சாதகமான நிரந்தரமான முடிவைப்பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com