சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் நான்காம் திகதி முதல் விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி இந்த விசேட போக்குவரத்து சேவைகளை நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் சொந்த இடங்களுக்குச் சென்று மீண்டும்,கொழும்புக்குத் திரும்பும் மக்களுக்காகவும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வெளிஇடங்களில் இருந்து கொழும்புக்குத் திரும்பும் மக்களுக்கான பஸ் சேவைகள் ஏப்ரல் 15 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment