இலங்கைக்கு எதிரான ஜெனீவா சூழ்ச்சியில் வெற்றியீட்டுவதற்காக, எல்ரிரிஈ சர்வதேச பயங்கரவாத வலையமைப்பு, 500 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியினை, செலவிட்டுள்ளதாக, புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
அச்செய்தியகளில் அரச சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் எல்ரிரிஈ யிற்கு ஆதரவான அமைப்புகள், ஜெனீவா மாநாட்டில் பங்கேற்றுள்ள நாடுகளுக்கு அழுத்தங்களை திணித்து வருவதாகவும், தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நிதி வழங்கி வரும் அரச சார்ப்பற்ற அமைப்புகள் தொடர்பான தகவல்கள், வெளிவந்துள்ளன எனவும் இவ்வமைப்புக்கள் எல்ரிரிஈ யிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை நடாத்துமாறு வற்புறுத்தி வருவதாகவும், இதற்காக, புலிகளின் சர்வதேச வலையமைப்பு, நிதி வழங்கி வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment