Saturday, March 31, 2012

மோட்டார் வாகனங்கள் மீதான வரிகள் அதிகரிப்பு

மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றுக்கான உற்பத்தி வரிகள் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கார், வேன், முச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுக்காக இதுவரை நிலவிய உற்பத்தி வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆயினும், டிரக்டர், பஸ்,லொறி போன்றவற்றுக்கான உற்பத்தி வரிகளின் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, வாகன நெருக்கடி, எரிபொருள்களுக்கான கேள்விகளும் துரிதமாக அதிகரித்துள்ளன.

எனவே, இறக்குமதி செலவை குறைத்து, அதனூடாக இறக்குமதிகளை குறைத்துக் கொள்ளும் நோக்கில் மோட்டார் வாகனங்கள் மீதான வரி சீர்திருந்தங்களை மேற்கொள்ள தீர்மானித்ததாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com