Wednesday, March 14, 2012

கலாபவனம் மற்றும் ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது

மஹிந்த சிந்தனையில் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மற்றொரு நடவடிக்கையாக கொழும்பிலுள்ள கலாபவனத்தையும் , ஜோன் டி சில்வா மண்டபத்தையும் நவீனமயப்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 323 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்கவின் மேற்பார்வையில் கலாசார அமைச்சினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபத்திற்கு இணைவாக புராதான கலை பொருட்களை பாதுகாக்கும் நிலையம் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பொது வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் தேசிய கலாபவனத்துடன் இணைந்ததாக விசேட கண்காட்சி கூடம் ஒன்றும், கலைஞர்களுக்கு இறுதி அஞசலி செலுத்துவதற்காக விசேட மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment