அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் தற்போதைய கலீபா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹமத் இஸ்ரேல் தலைவர் நெத்தன்யாவுக்கும் , ஈரான் அதிபருக்கும் அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில் இஸ்ரேல் ஈரனை தாக்கினால் அது மூன்னறாம் உலகப்போராக மாறிவிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இரு நாட்டு தலைவர்களும் போரை தவிர்த்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளார்கள்.
அக்கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போதைய நிலையில் போர் ஏற்பட்டால் அது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போராக மட்டும் இருக்காது.மாறாக உலகின் பிற நாடுகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்.அது அணு ஆயுதப் போராக இருக்குமாதலால் அந்தப் போர் உடற்குறைபாடுளைக் கொண்ட மற்றொரு தலைமுறையினரை உலகில் தோற்றுவிக்கும்.
எனவே, இரண்டு நாடுகளும் இந்தப் போரைத் தவிர்த்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment