நாட்டுக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க முடியும் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்
ஜெனீவா மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இந்த பிரேரணை மனித உரிமை மீறல் உறுப்பு நாடுகளின் பொதுவான ஒழுங்கு விதிமுறைக்கேற்ப சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரதான மேற்குலக நாடுகள் மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்னும் முன் வைக்கபட வில்லை.
அமெரிக்காவின் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் இலங்கையின் நேசத்திற்குரிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இதுவரைக்கும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் எஸ். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்,
நேற்று இலங்கை நாட்டுப் பிரதிநிதிகள கொங்கோ எல்ஜீரியா நாடுகளுடைய வெளிநாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அவர்கள் அந்த கலந்துரையாடலின் போது பூரண ஆதரவு அளிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். தாய்லாந்து, மலேசியா, கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் அமர்வில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது.
தென் ஆபிரிக்கா, ரஸ்யா, சீனா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. அதில் ரஸ்யாவின் வெளிநாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக அணிசேராத நாடுகளுடைய பிரதிநிதிகளின் குழுவினருடன் இந்த விடயம் குறித்து இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைக்கவுள்ள மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்த ஒழுங்காணைகளை பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து 15 விசேட அரச பிரதிநிதிகள் நேற்று ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ளனர். வெளிநாட்டு அமைச்சர் மற்றும் தூதுவர்களுடன் நேற்று விசேட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
அத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவின் 10 வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைப்பது பற்றி பேரவைக்கு வருகை தந்துள்ள சகல நாடுகளுக்கும் விளக்கமளிக்கபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முகமாக வெளிநாட்டு அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் தென் ஆபிரிக்கா மற்றும் ஜோர்தான் நாடுகளுக்கு விஜயம் மேற் கொண்டுள்ளார், எனவும் இந்தப் பிரேரணையை தோற்கடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment