Wednesday, March 14, 2012

சப்ரகமுவ மாகாணம் தொடர்பான நூல், மும்மொழி அகராதியின் கையேடு ஜனாதிபதியிடம் கையளிப்பு

சப்ரகமுவ மாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட அழகிய சப்ரகமுவ மாகாணத்தின் சுற்றுலா தகவல் அடங்கிய நூல் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. அலரி மாளிகையில் இவ்வைபவம் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாணத்தின் வரலாற்று புகழ்மிக்க இடங்கள், மற்றும் வனப்புமிக்க பிரதேசங்கள் தொடர்பான விடயங்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாகாண ஆளுநர் வி.ஜே.எம் லொக்கு பண்டார, முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சுற்றுலா துறை அமைச்சர் அத்துல குமார ராகுபத்த ஆகியோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மும்மொழி தொடர்பான பிரயோக அகராதி ஒன்றின் கையேடும் நாம் சிங்களம், தமிழ் கற்போம் ஆகிய நூல்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. அரச மொழிகள் திணைக்களத்தினால் இந்நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ் அகராதியில் 22 ஆயிரம் சொற்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவை 3 மொழிகளிலும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். எதிர்காலத்தில் இவ் அகராதி இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

பேராசிரியர் ஜே.பீ.திசாநாயக்க, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.விக்ரமசிங்க உள்ளிட்ட பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment