படைகளை கலைக்காமல் அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறதாம்
அநேகமான நாடுகள் யுத்தம் நிறைவடைந்தவுடன் படைகளை கலைத்து விடும். ஆனால் இலங்கையில் பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்தவுடன் படைகளை கலைக்காமல் அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை அரசாங்கம் பாரியளவு மேற்கொண்டு வருகிறது என்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்தார்.
வீடுகள் அடங்கிய நகரங்களை உருவாக்குவதை விட படை வீரர்கள் வசிக்
கும் பிரதேசங்களில் அவர்கள் விரும்பும் சூழ்நிலையில் வசதிமிக்க வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் தீர்மானித்தார். இதன் பிரகாரம் இராணுவ வீரர்கள் தெரிவு செய்யும் காணியில் இதுவரை ஏராளமான வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி அநோமா ராஜபக்ஷவும் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment