சிறிலங்கா சுதந்திர கட்சியினால் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு ஒழுக்காற்று விசாரணைக்கும் முகம் கொடுக்க தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமக்கு தெரிந்தவரையில் தாம் ஒழுக்கத்தை மீறிய எந்வொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, அமைச்சருக்கு எதிராக ஒழுக்கவீன விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
ராஜபக்ஷக்கள் இருக்கும் வரையில், தம்மை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்தை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, இது தொடர்பில்,ஜப்பானில் இருந்து இலங்கை ஊடமொன்றுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேர்வின் சில்வா, எந்த விசாரணைக்கும் முகம்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment