இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக மிசெல் சிசன் நியமனம்
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக மிசெல் சிசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
தற்போது பாக்தாத் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் தூதராக பணியாற்றி வரும் மிசெல் சிசன், அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுச் சேவையில் சிரேஷ்ட நிலையிலுள்ள இவர், பக்தாத்தில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தூதுக்குழுவின் உதவித் தலைவராக இதுவரை கடமையாற்றியவர் ஆவார்.
0 comments :
Post a Comment