யாழ்ப்பாணம் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த 13 வயதான யேசுதாசன் லக்சினி என்ற சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் தாக்கி தலை சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீதான விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இதன்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை சந்தேகநபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
சிறுமியின் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment