சிலி நாட்டில் வெள்ளப்பெருக்கு அபாயம் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்தது
சிலி ராச்சியத்தின் பல பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிலியின் வட பிரதேச பகுதிகளான சென்டியாகோ நகரில் அமைந்துள்ள எரிகா மறறும் எரினாஸ் ஆகிய பிரதேசங்களில், வெள்ளப்பெருக்கு நிலைமைகள் தீவிரமடைந்துள்ளன.
வெள்ளம் காரணமாக பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை சென்ஹோஸ் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, ஆற்றுப்பள்ளத்தாக்கு உடைந்துள்ளமையினால், புகையிரத வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வெள்ளத்தினால் நிர்க்கதியாகியிருந்த 300 புகையிரத பயணிகளை மீட்டெடுக்க, நிவாரண பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிலி ராச்சியத்தின் பெரு எல்லைப் பிரதேசத்திற்கு அருகாமையில் உள்ள நெடுஞ்சாலையில் வாகன வெள்ளம் காரணமாக போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு இதுவென, அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment