Thursday, March 15, 2012

சரத்பொன்சேகா ஹைகோப் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை ஹை கோப் வழக்கின் குற்றச்சாட்டுக்களில் முழுமையாக விடுவித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியாது என நீதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை குற்றவியல் சட்டம் மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான பிரகடனங்களுக்கு அமைய ஒரு நபருக்கு எதிரான ஒரே சம்பவம் தொடர்பில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்ததோடு, இராணுவ நீதிமன்றத்தில் ஹைகோப் சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற வழக்கு விசாரணையும் மேல் நீதிமன்றத்தில் தொடர்புபட்டிருந்த வழக்கின் விசாரணையும் ஒரே விதமானவை தெரிவித்தார்.

No comments:

Post a Comment