Wednesday, March 28, 2012

வீடொன்றினுள் அனுமதியின்றி நுழைந்த இரண்டு பொலிஸாருக்கு சேவை இடைநிறுத்தம்

பாதுக்கை பிரதேச வீடொன்றினுள் அனுமதியின்றி நுழைய முற்பட்டதற்காக கொஸ்கம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபில் ஒருவரும், சார்ஜன் ஒருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

பாதுக்கை பிரதேச வீடொன்றினுள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் வசமிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியுள்ளதெனவும் இதன்போது வீட்டிலிருந்தவர்களால் கான்ஸ்டபில் தாக்கப்பட்தாகவும், கூரான ஆயுதங்களின் தாக்குதலுக்கு இலக்கான கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்,பொலிஸ் சார்ஜன் ஒருவருடைய துப்பாக்கியை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதன் காரணமாக இருவரும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.



No comments:

Post a Comment