Thursday, March 15, 2012

சஜித் ஆலோசனையின்படி நடைபெறும் கூட்டங்களுக்கு ரணில் தடை

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின்படி எந்தவொரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கட்சி அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அறிவித்துள்ளார்.

சஜித்தின் ஆதரவாளர்கள் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் கூட்டங்களின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றமையே இந்த தீர்மானத்திற்கு காரணம் என்று தெரியவருகிறது .

ஐக்கிய தேசிய கட்சியின் பெயரில் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டத்திற்கும் கட்சியின் பொதுச் செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு நடைபெறாத கூட்டங்கள் கட்சி யாப்புக்கு முரணானவை எனவும், இதற்கு மாறாக செயற்படும் அமைப்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்கு காரணமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஹங்குரன் கெத்தவில் இடம்பெறவிருந்த இடண்டு கூட்டங்கள் திடீரென்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment