இந்திய இராணுவத்தளபதி யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்தார்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தென்பிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஏ.கே.சிங் நேற்று யாழ்பபாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்.வந்து யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே மற்றும் ஆளுநுர் மேஜர் ஜெனரல் ஜி .ஏ சந்திரசிறி அகியோரை சந்தித்து கலந்துரையடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மே;றகொண்டு வரும் அபிவிருத்தி திட்டப்பணிகளை பாராட்டியதோடு நல்லூர் ஆலயத்திற்கும் நேரடியாக சென்று பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருடன் இராணுவ உதவியாளர் சுப்பிரமணியன் கடற்படை கப்டன் அனில் காபூர் உள்ளிட்ட அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். இதேவேளை இவர்கள் வவுனியாவிற்கான விஜயத்தையும் மேற்கொண்டதோடு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப் போராளிகளை சந்தித்தார்.
0 comments :
Post a Comment