தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே படைவீரர்கள் பலி
நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட சாவகச்சேரி ஏழாம் விஜயபாகு ரெஜிமெண்ட்டில் கடமையாற்றும் மூன்று படைவீரர்களும் தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே உயிரிழந் துள்ளதாகவும் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்றாவது தரப்பினரின் தலையீடு இல்லை யென்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்சி குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள
இராணுவக் காவலரனுக்கு கடமைக்கு சென்ற மூன்று படைவீரர்களும் தங்களுக்கு இடையில் கடமைகளை பங்கிட்டு கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இவ்விபரீதம் இடம் பெற்றுள்ளதாகவும் தன்னுடன் கடமை புரிந்த இரண்டு படைவீரர்களையும் சுட்டு கொன்று விட்டு மற்றயவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்தவர் ஒரு லான்ஸ் கோப்ரல் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment