தெற்கு அதிவேக வீதியில் இரண்டாவது மரணம்
தெற்கு அதிவேக வீதியின் இரண்டாவது விபத்து இன்று பதிவாகியது.
காலியிலிருந்து பயணித்த டிரக் வண்டியொன்று இன்று பிற்பகல் ஒருமணியளவில் கஹதுடுவை பகுதியில் விபத்துக்குள்ளானது.
இதன்போது குறித்த ட்ரக் வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment