Thursday, March 15, 2012
ஹொரணை கூட்டத்தில் ரணிலுக்கு எதிராக கட்சியினர் கூச்சலிட்டதால் பெரும் குழப்பம
ஐக்கிய தேசியக் கட்சியின் ஹொரணை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதோடு அங்கு இடம்பெற்ற காரசார வாக்குவாதங்கள், பின்னர் மோதலாகவும் மாற்றமடைந்ததைத் தொடர்ந்து கூட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஹொரணை, வல்லபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ரணில் விக்ரமசிங்க கூட்டத்தில் உரையாற்றியதை தொடர்ந்து, சிறிகொத்தவை கட்டியெழுப்புவதற்கான நிதியத்திற்கு நிதி சேகரித்தார்.
சிறிகொத்த மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட ஒளிநாடாவை காண்பிக்க, எதிர்க்கட்சி தலைவர் முயற்சித்த வேளையில், காரசார வாக்கு வாதங்கள் இடம்பெற்றன.
கட்சி ஆதரவாளர்கள் இதனை எதிர்த்ததுடன், ஒளிநாடாவை காட்சிப்படுத்த, வேண்டாம் எனத் தடை விதித்தனர். இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலை, பின்னர் மோதலாக மாற்றம் பெற்றது.
அதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்புடன் அவ்விடத்திலிருந்து அழைத்துச்செல்ல, பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்தனர். இதேவேளை இச்சம்பவத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜ.தே.க ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர்.
No comments:
Post a Comment