இங்கிலாந்து நாட்டில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி
இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் பிரட்போர்டு(மேற்கு) பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இதன் ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று முடிவு வெளியானது. இதில் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியவை சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். இந்த இடைத்தேர்தலில் சிறிய கட்சியான இடதுசாரி மதி கட்சி வேட்பாளர் ஜார்ஜ் கால்லோவே 18,341 வாக்குகள் பெற்று வென்றார்.
இவர் போருக்கு எதிராக பிரசாரம் செய்து வருபவர். 2 முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர் தற்போது முதல் தடவையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஹ¨சைன் (தொழிலாளர் கட்சி) 8,201 ஓட்டுகளும், ஜாக்கி வெயிட்லி (கன்சர்வேட்டிவ் கட்சி) 2,746 ஓட்டுகளும் பெற்று தோல்வியை தழுவினர். இந்த தொகுதி தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு மிகுந்தது.
கடந்த 1974-ம் ஆண்டு தேர்தல் முதல் தொழிலாளர் கட்சியே வெற்றி பெற்று வந்திருக்கிறது. தற்போது முதல் தடவையாக தோல்வி அடைந்திருப்பது அந்த கட்சி தலைவர்களை கவலை அடைய வைத்துள்ளது.
0 comments :
Post a Comment