இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர் - ஜனாதிபதி
ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் , இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எப்பொழுதும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணிய இடம் தரப் போவதில்லை எனவும், பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டு வந்த நிலையில், நிரந்தரமான சமாதான சூழ்நிலையை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment