பிரிந்த ஜெயலலிதாவும் - சசியும் மீண்டும் சேர்ந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியை பிடிக்க கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்ததோழி சசி மற்றும் சசியின் கணவர், அவரது உறவினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதுடன் அவர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக சசி நீதிமன்றத்தில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இன்நிலையில் இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் எல்லா முடிவுகளும் நானே எடுத்தேன் என்றும் சசி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த வாரம் சசி ஜெயலலிதாவிற்கு ஒரு கடிதம் எழுதினார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்ற விரும்புவதாகவும் கனவில் கூட அக்காவுக்கு துரோகம் நினைத்தது இல்லை என்றும் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அதனையடுத்து சசி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதுடன் சசி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இன்நடவடிக்கை கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் சசியின் கணவர் உட்பட ஏனைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment