Sunday, March 4, 2012

நெடுந்தீவில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவின் பின் கொலை செய்யப்பட்டுள்ளார்

நெடுந்தீவில் 12 வயது பாடசாலை மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவி காலையில் சந்தைக்க பொருட்களை வாங்கச்சென்ற சமயம் உறவினர்கள் அவதானித்துள்ளனர் என்றும் பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை.

இதனால் பெற்றோர் அவரை தேடிஅலைந்தவேளை அவர் அப்பகுதியிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களும் சடலத்துடன் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் ஊர்காவற்றுறைப்பொலிஸார் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்களுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com