வவுனியாவில் தடுப்பிலுள்ள புலிச் சந்தேக நபர் நவீன தொலைபேசிகளை பாவிக்கின்றனர்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்களிடம் அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட கையடக்க தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளது என புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட செய்மதி தொலைபேசி ஊடாக இவர்கள் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்ந்தும் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் தாம் தேடுதல்களை மேற்கொள்ள சிறைகளுக்குள் செல்லவும் விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் அனுமதிப்பதில்லை எனவும் சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வவுனியா சிறைச்சாலையின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 42 பேர் இரண்டு வார்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் செய்தி தொலைபேசி உட்பட பல்வேறு வகையான 100 தொலைபேசிகள் வரை இவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment