Friday, March 30, 2012

எனக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது – சபாநாயகர்

எங்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளம் போதாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவிக்காக எனக்கு கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியவில்லை.இப்படி எனக்கிருந்தால், அரசாங்க ஊழியர்களின் நிலை எவ்வாறு இருக்கும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு போதியளவு சம்பளம் கிடைப்பதில்லை என்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று பேரைகொண்ட குடும்பம் ஒன்றிற்கு ஒரு மாத்திற்கு 7500 ரூபா இருந்தால் நன்கு போதுமானது எனவும், இது தொடர்பாக தன்னுடன் எவரும் விவாதிக்க வரலாம் எனவும், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment