இலங்கையில் உள்ள அரச பல்கலைகழகங்கள் தவிர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்பு சான்றிதழை வழங்குவதற்கான தகைமைகளை ஆராய்வதற்கான அதிகாரசபையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க முன்னெடுத்துளதாக உயர்கல்வி அமைச்சில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக சுனில் ஜயந்த நவரத்தின (தற்போதைய உயர்கல்வி அமைச்சின் செயலாளர்) நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
இதுவரை இந்த பட்டபடிப்பு சான்றிதழை வழங்குவதற்கான தகுதிகாண் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment