நீர்கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் தீயினால் உடல் கருகி பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 5 மணியளவில் கல்கத்தை சந்தியில் இடம் பெற்றது.
வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதியதை அடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எறிந்ததால் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவெல கொடிரோதகம பிரதேசத்தைச் சேர்ந்த மத்தும ஹேவக ஜகத் ரூபசிங்க என்பரே சம்பவத்தில் பலியானவராவார்.இவர் கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருந்து,நீரகொம்பு, ஏத்துக்கால பிதேசத்தில் உள்ள ரெஸ்ட்டூரன்ட் ஒன்றில் தொழில் செய்து வருபவராவார் என்று தெரியவருகிறது.
விபத்துச் சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு தீயணைப்பு படைபிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
இதேவேளை, இன்று முற்பகல் சம்பவ இடத்துக்கு வந்து நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் விசாரணை நடத்தியதுடன், பிரேத பரிசோனைக்காக சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment