Saturday, March 10, 2012

ஒரேயொரு முகவரியின் கீழ்மாத்திரமே தம்மை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய முடியும்

நாட்டில் உள்ள எந்தவொரு பிரஜைக்கும் ஒரேயொரு முகவரியின் கீழ் மாத்திரமே வாக்காளர் பதிவேட்டில் தங்களுடைய பெயரை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அத்தகையவர்கள் எந்த முகவரியின்கீழ் தம்மைப் பதிவுசெய்வது என்ற விபரங்களை எழுத்து மூலம் கோரும் நடவடிக்கைகளை தேர்தல்கள் செயலகம் மேற்கொண்டுவருகின்றது.

அத்துடன் இரட்டைப் பதிவு தொடர்பான தேர்தல்கள் செயலகம் கோரும் விசாரணைகளுக்கு குறிப்பிட்ட வாக்காளர்கள் பதிலை அனுப்பாவிடத்து அவர்களின் பெயரை வாக்காளர் பதிவேட்டில் உட்சேர்ப்பதற்கான முகவரியை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வாக்காளர் பதிவேட்டின் தகவல்களை பரிசீலிக்கும போது பெயர்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களில் வேறுபாடுகள் கண்டறியப்படும் சந்தர்பங்களில் அது தெடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இரட்டைப் பதிவு தொடர்பாக விசாரணைகளுக்கு பதில் அனுப்புவதற்குரிய கால எல்லையை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தம்மை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com