கொழும்பிலுள்ள தேசிய நூதனசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற திருட்டு சம்பவத்தின் போது கமராக்கள் இயங்கவில்லை என தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் நூதனசாலையில் யாரும் தங்குவதில்லையெனவும், நூதனசாலை அதிகாரிகள் சாவிகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்ததோடு, விசாரணையின் போது இவை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய நூதனசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு வாள், பல தங்க நாணயங்கள் மற்றும் மோதிரங்கள் உட்பட பல புரதான பொருட்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment