நாட்டின் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தொழில் நுட்பம் சார் வல்லுநர்கள் இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மருந்தாளர்கள்,மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், எக்ஸ் கதிரியக்கவியலாளர்கள், இயன் மருத்துவர்கள் மற்றும் தொழில்வழி சிகிச்சையாளர்கள் அங்கம் வகிக்கும் நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்கள் ஒன்றியம் எதிர்வரும் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதென முடிவெடுத்தது
இதன் அடிப்படையிலேயே இப்பணிப்புறக்கணிப்பில் இன்று இரண்டாவது நாளாகவும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் சுகாதாரத்துறையில் ஏனைய பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல், பட்டதாரிகளாக வெளியேற்றப்பட்டுள்ள மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களின் நியமனத்தை உடனடியாக அமுல்படுத்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி இவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கடந்த 6 வருடங்களாக வழங்கப்படாதுள்ள வகுப்பு ஐ இற்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் 15 வருடங்களாக வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள விசேட தரத்திற்கான நியமனங்களை உடனடியாக வழங்குதல்போன்ற கோரிக்கைகளையும் உள்ளடக்கியே இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இத்தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment