Monday, March 26, 2012

பாண் வியாபாரியை தாக்கி பணத்தை கொள்ளையிட்ட நபருக்கு பிணை

துவிச்சக்கர வண்டியில் பேக்கரி உற்பத்தி பொருட்களை (பாண் ,பணிஸ்) விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவரை தாக்கி அவரிடமிருந்த 600 ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 7500 ரூபா ரொக்கப்பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார் .

ஜா-எல, துடெல்ல , முத்துராஜவெல வீதியை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். எம்.ரத்னசிறி தேவப்பிரிய என்ற பாண் வியாபாரியே இந்த வழக்கின் முறைப்பாட்டாளராவார்.

வழக்கின் சந்தேக நபர் தடுகம சுதுவெல வீதியில் வைத்து முறைப்பாட்டாளரை தாக்கி பணத்தை கொள்ளையிட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரியாத்திலிருந்து தமிழர் ஒருவரின் பெயரில் நாடு திரும்பிய முஸ்லிம் நபருக்கு பிணை

ரியாத்திலிருந்து போலி தமிழ் பெயரில் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் நபர் ஒருவரை நீர்கொழும்ப பிரதான நீதவான் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் , இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

போலி பெயர் பதிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு திரும்பி குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டடில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த நபராவார்.

சந்தேக நபர் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி மோசடியான முறையில் நாட்டுக்கு திரும்பிய போது கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com