மாணவியின் கொலையைக்கண்டித்து நெடுந்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை மாணவியின் கொலையைக் கண்டித்து நெடுந்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்றைய தினம் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளி சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவேண்டும் என்று கோசமிட்ட இவர்கள் தமக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்தனர்
இதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறைபொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பொலிஸாரிடம் தமது கோரிக்கையை முன் வைத்தனர்.
இதேவேளை இப்போராட்டம் காரணமாக நெடுந்தீவுக்கான படகச் சேவை மற்றும் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment