யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடி வதையினால் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கலை பீட முதலாம் வருட மாணவன் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்,சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையின் காரணமாக குறித்த மாணவனின் காதின் செவிப்பறை உடைக்கப்பட்டுள்ளதுடன் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவணான 22 வயதுடைய தில்லைநாதன் தனராஜ் என்பவரே படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான குறித்த மாணவனின் பெற்றோர் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment