Sunday, March 25, 2012

குடிபோதையில் லொறியை செலுத்தி பெண்ணுக்கு மரணத்தை ஏற்படுத்திய சாரதிக்கு அபராதம்

குடிபோதையில் லொறியை செலுத்தி வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவருக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட லொறி சாரதிக்கு நீ;ர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ்.வீரதுங்க 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் .

கொச்சிக்கடை ,பலகத்துறை பிரதேசத்தை சேர்ந்த அன்ரன் அப்ரஹம் என்ற நபருக்கே அபராத தொகை விதிக்கப்பட்டது.குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை உட்பட நான்கு குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதி மீது சுமத்தப்பட்டிருந்தது .

பிரதிவாதியால் செலுத்திவரப்பட்ட லொறியில் மோதி நீர்கொழும்பு மஹஹசனுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஜி.சந்திராணி (60 வயது) என்ற பெண் மரணமாகியுள்ளார். இந்த விபத்து நீர்கொழும்பு குரூஸ் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com