அமெரிக்கா தனது இரட்டை வேடத்தை நிறுத்த வேண்டும்- பிரதம சங்க நாயக்கர் ஒப்பாமாவிற்கு கடிதம
ஒருபுறம் இலங்கைகைய பாராட்டிக்கொண்டு, மறுபுறம் அதற்கு எதிராக செயற்பட வேண்டாமென, அமெரிக்காவின் பிரதம சங்க நாயக்கர், ஒபாமாவிற்கு, பகிரங்க கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச பிரேரணையில், கைச்சாத்திட வேண்டாமென கோரி, அமெரிக்காவின் பிரதம சங்க நாயக்கர் வல்பொல பியனந்த தேரர், ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு, பகிரங்க கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்த, உலகின் ஒரே நாடான இலங்கையை பாராட்டிக்கொண்டும், மறுபுறத்தில், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அழுத்தங்களை கொடுத்து, எல்.ரி.ரி.ஈ யிற்கு ஆதரவளிக்கும் இரட்டை வேடத்தை, நிறுத்துமாறு, அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கும், கற்ற பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், அதன் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எவ்வித கருத்தினையும் தெரிவிக்காத அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக, செயற்படுவது, 150 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவுக்கு ஒரு கரும்புள்ளியாகுமென, அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment