அண்மையில் கொழும்பு தேசிய நூதனசாலையில் இருந்து களவாடப்பட்ட புராதன வாள் உள்ளிட்ட பொருட்கள், சமய பூஜை ஒன்றுக்காக களவாடப் பட்டிருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரிய பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வாள் திருடப்பட்டுள்ளமையானது, தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் , குறிப்பாக இது பூஜை நிகழ்வொன்றில் பயன்படுத்துவதற்காக திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் களவாடப்பட்டதும், இதனை இரண்டு நாட்களுக்குள் கண்டு பிடித்துவிடலாம், அச்சப்பட வேண்டாம் என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டமை, இது திட்டமிட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment