கோட்டே ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குகள் இருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வண. பொரலஸ்கமுவ குணரட்ன தேரர் (65), வண பிட்டிகல தினசிறி தேரர் (75) ஆகியோரே பலியானவர்களாவர். இவ்விரு பிக்குகளும் நீண்டகாலமாக இவ்விகாரையில் வசித்து வந்தவர்களாவர்.
இப்பிக்குகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார்.
இச்சம்பவத்தினால் கோட்டே பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் அப்பகுதியில் திரண்டனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விகாரைக்கு முன்னாள் உள்ள காணியில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுபவர்களாவர்.
உடனடியாக அந்தப் பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார், மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்திய தேடுதலின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதவான் விசாரணைகளை அடுத்து சடலங்கள் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment