யாழ்.தென்மராட்சி கோவிலாக்கண்டியிலிருந்து மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தென்மராட்சி கோவிலாக்கண்டி பகுதியில் இருந்து ஜந்து மிதிவெடிகள் மீட்கப்பட்டுதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை இந்தியாவின் இர்கோன் நிறுவனத்தினர் கண்டு பிடித்துள்ளனர்.
பளை முதல் யாழ்ப்பாணம் வரையான ரயில்பாதை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவரும் இர்கோன் நிறுவனத்தினர் ரயில் பாதை அமைப்பிற்கான பணிகளை மேற்கொண்டபோதே இவை மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் இவற்றை செயலிழக்க இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment