கட்டுநாயக்க - ஆடிஅம்பலம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நேற்றிரவு 9.30 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஹவ - தலத்தாகம விஹாரை சந்தியில் வசிக்கும் 32 வயதான நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளிலிருந்து வந்த இனந்தெரியாதோர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment