அமெரிக்கத் துருப்பினர் இலங்கையில் இல்லை - இலங்கை இராணுவம்
அமெரிக்கத் துருப்பினர் இலங்கையில் நிலை கொண்டிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க அல்லது வேறும் எந்தவொரு நாட்டு இராணுவத்தினரும் இலங்கையில் தற்போது நிலை நிறுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஆற்றலை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அமெரிக்கப் படையினர் தென் ஆசிய நாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment