மீன் பிடிக்கச் சென்ற வாலிபர் முதலைக்கு பலி
மட்டக்களப்பு கொக்கடிச்சோலை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மகிழடித்தீவில் மீன்பிடிக்கச் சென்ற 24 வயதுடைய வாலிபரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
காணாமல் போனவர் கே.சந்திரகாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கொக்கடிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment