சவுதி அரேபியாவில் பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்காக சர்வதேச மட்டத்திலான சமூக பாதுகாப்பு செயல்த்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிலாளி நன்மையடைவதுடன் தொழில் கொள்வோரும் நன்மையடைவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் 50 வயதிற்கு கீழ்ப்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் இயற்கை அல்லது திடீர் விபத்துக்களினால் பயனாளிகள் மரணமடைந்தால் அவருக்கு 15 ஆயிரம் சவுதி றியால்கள் நஷ்டஈடாகவும் திடீர் சுகயீனம் காரணமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பங்களில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment