Monday, March 12, 2012

பிரபாகரனின் மரணம் குறித்து விவரணப்படம் தயாரிக்கப்படவுள்ளது என்கிறார் இராணுவத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக விவரணப்படமொன்றை இலங்கை இராணுவம் தயாரிக்கவுள்ளது.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று முல்லைத்தீவில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

நந்திக்கடல் ஏரியில் இறுதிக்கட்ட யுத்தத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியங்களைக் கொண்டதாக இந்த விவரணப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அங்கு கூறியுள்ளார்.

'பிரபாகரனின் மரணம் குறித்த உண்மைத் தகவல்களை இப்படம் கொண்டிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள், அப்போது அங்கிருந்தவர்கள் இதற்கான நேர்காணப்படுவர். இதன் மூலம், நந்திக்கடலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் அறிந்துகொள்ள வாய்ப்புகிட்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com