Sunday, March 25, 2012

மேர்வின் சில்வாவின் கருத்து அரசின் கொள்கை அல்ல என்கிறார் அமைச்சர் யாப்பா

இலங்கையின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் பத்திரிக்கையாளர்களின் கை, கால்களை முறிப்பேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா விடுத்த மிரட்டலானது, அரசின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை என்று பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பதில் ஊடக அமைச்சர் என்ற முறையில் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை தன்னால் கூற முடியும் எனவும் , சில நிருபர்களின் புகைப்படங்கள் தொலைக் காட்சி மூலம் காட்டப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் உடனே தான் அதை நிறுத்திவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உண்மையில் ஊடகவியலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும், இது குறித்து தவறான தகவல்கள் பரவியுள்ளதாகவும் பதில் ஊடகத்துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை மீது ஐநா மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக களனியில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மேர்வின் சில்வா, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் கை, கால்களை உடைப்பேன் என்று எச்சரித்திருந்தார்.

சுனந்த தேசப்பிரிய, நிமால் பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டுச் அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment