அமைச்சர் டக்ளஸை கைது செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
1987 ஆம் ஆண்டு சூழைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கில் 1994 ஆம் ஆண்டு சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்ததால் டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்ததால் டக்ளஸ் தேவானந்தாவை சர்வதேச பொலிஸாரின் உதவியோடு கைது செய்யுமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்துள்ளதாக சன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவில் ஏதேனும் ஒரு குற்றத்தை இழைத்த இந்தியரையோ அல்லது வெளிநாட்டவரையோ இன்டர்போல் உதவியுடன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வதற்கான வாய்ப்பை இந்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதன்படி சர்வதேச குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் ரெட்காட்னர் நோட்டீசை டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்க இந்தியா வற்புறுத்த வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக சன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment